முன்கூட்டிய வீசாவின்றி சீனர்கள் இலங்கை வரத் தடை | தினகரன்


முன்கூட்டிய வீசாவின்றி சீனர்கள் இலங்கை வரத் தடை

சீனாவின் 53 நகரங்களிலிருந்து இலங்கைக்கு வருகை தர விரும்புவோர், முன்கூட்டிய வீசா விண்ணப்பங்கள் இல்லாமல், நாட்டிற்கு வருகை தர முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சீன பெண் ஒருவர் தென் மாகாணத்தில் தங்கியிருந்த இடங்கள் அடையாளம் காணப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்படுமென தென்மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சீன பெண் தற்போது சிகிச்சைக்காக அங்கொடையிலுள்ள ஐ.டி.எச். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை தரு வீசா (On arrival visas)  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக,  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...