நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் உத்தரவிட அதிகாரம் இல்லை | தினகரன்


நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் உத்தரவிட அதிகாரம் இல்லை

நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் உத்தரவிட அதிகாரம் இல்லை-No Legal Athority to Order Statutory Functions-AG Dappula de Livera Inform PCoI

நீதிமன்றில் நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் தமக்கு உத்தரவிட சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

விசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ரியர் அட்மிரல் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் மீதான வழக்குகளை இடைநிறுத்துமாறு, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சட்ட மாஅதிபருக்கு நேற்றையதினம் (27) தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2008 - 2009 காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் குறித்த இருவர் உள்ளிட்ட 14 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே குறித்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பிலேயே சட்ட மாஅதிபர் இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...