வெளிநாட்டில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் | தினகரன்


வெளிநாட்டில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்கள்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டில் பணிபுரிவோர்களின் குழந்தைகளுக்கு புலமைப் பரிசில் உதவித்தொகை வழங்க இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், க.பொ.த (சா.த) மற்றும் க.பொ.த (உ.த) தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேலும் ஊக்குவிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலமைப்பரிசில்களை வழங்குகிறது. மேலதிக விபரங்களையும் விண்ணப்பங்களையும் பணியக வலைத்தளம் www.slbfe.lk மூலம் பெறலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 30.04.2020.

பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாயப்புக்காக சென்ற தொழிலாளர்களின் கல்விகற்கும் பிள்ளைகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 1996 இல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அன்றுமுதல் ஆண்டுதோறும் இதுவரையில் 44832 பிள்ளைகளுக்கு 897,425,000.00 பெறுமதியான புலமைப்பரிசில் பணியகத்தால் வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...