குருநாகல் மாவட்டத்திலேயே பிரதமர் மஹிந்த போட்டி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார். குருநாகல் தவிர்ந்த வேறு எந்த மாவட்டத்திலும் அவர் போட்டியிடப் போவதில்லை என பொதுஜன பெரமுன தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தை கைவிட்டு வேறு மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிடப் போவதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தியில் எந்த உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க ஏற்படுத்திய கடும் அழுத்தத்திற்கு மத்தியில் மஹிந்த ராஜபக்‌ஷ பெருவெற்றியீட்டியதாக குறிப்பிட்ட அவர், குருநாகல் மக்களை கைவிட்டு செல்ல அவர் தயாரில்லை என்றும் கூறினார்.குருநாகலில் கடுமையான சவால் உள்ளது. இந்த நிலையில் அந்த மக்களை கைவிட்டு செல்ல அவர் தயாரில்லை என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

மார்ச் 2 ஆம் திகதிக்குப் பின்னர் எந்த நிமிடமும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க முடியும். ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுக்கவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் புதிய பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பெற வேண்டும்.மக்கள் ஆணை கிடைத்த ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுக்க தமக்கு உகந்த பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

19 ஆவது திருத்தம் காரணமாக நான்கரை வருடம் வரை பாராளுமன்றம் செயற்படுகிறது.காலாவதியான பாராளுமன்றத்துடனே ஜனாதிபதிக்கு செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.(பா)


Add new comment

Or log in with...