2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்

2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்-2nd Test-SLvZIM-ZIM Elected to Bat First

கசுன் ராஜிதவுக்கு பதில் விஷ்வ பெனாண்டோ

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

ஹராரேவில் இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் கடந்த போட்டியில் விளையாடிய பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவிற்கு பதிலாக ஓஷத பெனாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.

2nd Test: SLvZIM; சிம்பாப்வே முதலில் துடுப்பாட்டம்-2nd Test-SLvZIM-ZIM Elected to Bat First

கசுன் ராஜித (இ) விஷ்வ பெனாண்டோ (வ)

சிம்பாப்வே அணி சார்பில் இரு வீரர்கள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹராரேவில் கடந்த வாரம் (19 - 23) இரு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதில் தனது கன்னி இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த அஞ்சலோ மெத்திவ்ஸ் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

அந்த வகையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் இலங்கை அணி 1 - 0 என முன்னிலை வகிக்கின்றது.

சிம்பாப்வே:
Prince Masvaure, Kevin Kasuza, Brendan Taylor, Craig Ervine, Sean Williams (c), Sikandar Raza, Regis Chakabva (wk), Donald Tiripano, Carl Mumba, Tinotenda Mutombodzi, Victor Nyauchi

இலங்கை:
Dimuth Karunaratne (c), Oshada Fernando, Kusal Mendis, Angelo Mathews, Dinesh Chandimal, Niroshan Dickwella (wk), Dhananjaya de Silva, Suranga Lakmal, Lasith Embuldeniya, Vishwa Fernando, Lahiru Kumara


Add new comment

Or log in with...