கட்டார் தூதுக்குழு – பிரதமர் சந்திப்பு: மின் சக்தி துறை ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடல்

கட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (Saad Sherida Al Kaabi) தலைமையிலான கத்தார் தூதுக்குழு நேற்று (26) கொழும்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது.

இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நல்ல அரசியல் உறவுகளைக் குறிப்பிட்டு நினைவுபடுத்திக் கொண்டதோடு, சக்தி வலு துறையில் மேலும் ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடினர்.  அதேவேளைபொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நட்பு எரிசக்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் பரிமாறிக்கொண்டனர்.

இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1976இல் நிறுவப்பட்டன. 2018ஆம் ஆண்டில், கட்டார் உடனான இலங்கையின் மொத்த வர்த்தக வருமானம் 118மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. கட்டாருடன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதில் இலங்கை அதிக ஆர்வம் கொண்டுள்ள அதே நேரத்தில் கட்டார் முதலீட்டாளர்களை இலங்கையில் வர்த்தகம் செய்வதற்கான முதலீட்டு ஊக்குவிப்பிலும் கவனம்இலங்கைசெலுத்துகிறது. கட்டார் நாட்டிலிருந்து முதலீடுகளை ஈர்க்க பெட்ரோ கெமிக்கல், சுற்றுலா, உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு சாத்தியமான துறைகள் காணப்படுகின்றன.

இந்த சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பிரதமர் செயலாளர் காமினிசெனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...