சீன பயணிகளுக்கு விமான நிலையத்தில் தனி வாயில் | தினகரன்


சீன பயணிகளுக்கு விமான நிலையத்தில் தனி வாயில்

சீன பயணிகளுக்கு விமான நிலையத்தில் தனி வாயில்-Separate Terminal For Chinese Arrived From China at BIA

மரண எண்ணிக்கை 56 இலிருந்து 80 ஆக உயர்வு; 3,000 பேருக்கு தொற்று

சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அத்துடன், நாட்டிற்குள் கொரோனா வைரஸ் ஊடுருவதை தடுப்பதற்கான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுகை காரணமாக பாதிக்கப்பட்ட 80 பேர் சீனாவில் மரணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (26) 56 ஆகக் காணப்பட்ட மரணமடைந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

அத்துடன், சுமார் 3,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.


Add new comment

Or log in with...