நால்வருக்கும் கொரோனா தொற்று இல்லை; ஆய்வில் உறுதி | தினகரன்


நால்வருக்கும் கொரோனா தொற்று இல்லை; ஆய்வில் உறுதி

நால்வருக்கும் கொரோனா தொற்று இல்லை; ஆய்வில் உறுதி-Corana Test Negative of 4 Case

சந்தேகத்தில் 7 வெளிநாட்டவர் உள்ளிட்ட 10 பேர் IDH இல்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கொலன்னாவ தொற்றுநோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் அத்தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நால்வரின் இரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலான இறுதி அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பொரளையிலுள்ள மருத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

இரு சீனர்கள் உள்ளிட்ட நால்வர் கொரோனா தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் அறிகுறிகளுடன் IDH இல் இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தோடு, அவர்களின் ஆரம்பகட்ட பரிசோதனையிலும் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நோய் தொற்று தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில், 7 வெளிநாட்டவர் உட்பட 10 பேர் IDH இல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Add new comment

Or log in with...