Spiralation ICTA உடன் இணைந்து இளைஞர்களுக்கு களம் | தினகரன்


Spiralation ICTA உடன் இணைந்து இளைஞர்களுக்கு களம்

Spiralation ICTA உடன் இணைந்து இளைஞர்களுக்கு களம்-ICTA Spiralation

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA) இனால் ஒழுங்கு செய்யப்படும்  தொழில்நுட்ப ஆரம்ப ஆதரவு நிகழ்ச்சித்திட்டமான Spiralation, 2019 ஆம் ஆண்டில் 16 தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை நிதியுதவி, பூரண பயிற்சி, பயிற்சிப்பட்டறைகள் மற்றும் வழிகாட்டல் ஊடாக ஆதரவளித்துள்ளது.

இதன்போது  தெரிவுசெய்யப்பட்ட 12 தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களுக்கு விரிவான பயிற்சி,  அரச அங்கீகாரம் மற்றும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றுடன்  தலா 1.5 மில்லியன் நிதியதவியளிக்கப்பட்டதுடன், மேலும் 4 தொடக்கநிலை வணிகங்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டன. Spiralation, இதுவரை மொத்தமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 70 தொடக்கநிலை வணிகங்களுக்கு உதவி புரிந்துள்ளதுடன், அவை பாரிய நிறுவனங்களாக அபிவிருத்தியடையத் தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டன.

Spiralation,  தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமூக பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தல் என்பவற்றில் கவனம் செலுத்தும் தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களை வலுவூட்டுவதன் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பிரதானமாக கவனம் செலுத்துகிறது. இதன் மூலமாக, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய இலக்குகள் என்று அழைக்கப்படும் நிலையான அபிவிருத்தி இலக்குகளான (SDGs) வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பு, புவியைப் பாதுகாத்தல், அமைதிக்கான விடியல் மற்றும் 2030 ஆம் ஆண்டளவில் பூமிக்கு சௌபாக்கியம் ஆகியவற்றை அடைய இந்த நிகழ்ச்சித்திட்டம்  எதிர்ப்பார்க்கின்றது.

Spiralation ICTA உடன் இணைந்து இளைஞர்களுக்கு களம்-ICTA Spiralation

Spiralation 2019 நிகழ்வின் மூலம் Frammix, Thingerbits, Tracified, RN Innovations, Ideal Six, BookClub.lk, SchoolX, Univiser, Smartstudy, Real Pixels, Kayal Technologies, Cookoo eats, Iron blood games, Lanka Travel Mart, Direct Pay மற்றும் FieldR ஆகிய தொழில்நுட்ப தொடக்கநிலை நிறுவனங்களுக்கு உதவியளிக்கப்பட்டன. 

இந்த தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களில் சில ஏற்கனவே இயங்கி வருகின்றன. இவை  குறிப்பிட்ட துறைகளில் பாரிய நிறுவனங்களாக அபிவிருத்தி அடைந்து வருவதுடன், நிறுவனத்தின் இலக்குகளை அடைவதற்கு மேலதிகமாக பேண்தகு எதிர்காலத்தை செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு பல்துறை தீர்வுகளை வழங்கி வருகின்றன.

Thingerbits
Thingerbits என்பது என்பது ஒரு கல்விசார் தொழில்நுட்ப அடிப்படையிலான தொடக்கநிலை வணிகமாகும், இது மக்கள் மத்தியில் DIY எனப்படும் 'தானே செய்தல்' கலாசாரத்தை ஊக்குவிக்கிறது, இது படைப்பாற்றல் மற்றும் புதிய யோசனைகளை உருவாக்க உதவுகிறது.

SchoolX
நாடு முழுவதும் தரமான கல்வியை உருவாக்குவதில் SchoolX முக்கிய பங்கு வகிக்கின்றது, இணைய கற்றல் தளமான  இது டிஜிட்டல் உள்ளடக்கங்கள் மூலம் சுய கற்றலை ஊக்குவிக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்களை மட்டுமே சார்ந்து இருக்காமல் மிகவும் ஆக்கபூர்வமாக செயற்பட அனுமதிக்கிறது.

Bookclub.lk
Bookclub.lk என்பது ஒரு டிஜிட்டல் வெளியீட்டு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது இலங்கை புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இலங்கை வாசகர்களுக்கு அவர்கள் விரும்பும் புத்தகங்களை எளிதில் அணுகுவதற்கும், உள்ளமைக்கப்பட்ட இலத்திரனியல் வாசிப்பு அப்ளிகேஷன் மூலம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

Univiser
Univiser என்பது ஒரு இலத்திரனியல் வழிகாட்டல் மேடையாகும், இது ஒரு கல்வி நிறுவனத்தின் , எதிர்கால, தற்போதைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களை இணைக்கும் தனிப்பயனாக்கக்கூடிய சமவுரிமைப் பகிர்வு பிணைய (peer to peer) தீர்வாகும்.

SmartStudy
SmartStudy என்பது பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் பல்தேர்வு வினாக்களில் (MCQ) அதிக புள்ளிகள் பெறத் தேவையான திறனை மேம்படுத்துவதற்கான ஒரு புதுமையான இணைய அப்ளிகேஷனாகும்.

Frammix
Frammix என்பது தோற்ற மெய்ம்மை (Virtual Reality- VR) மேடையாகும், இதில் அவர்கள் VR பயணங்களை (குறிப்பாக புராதன தளங்களை) இலக்குவைத்து உருவாக்குகின்றனர். இந்த முயற்சியின் மூலம், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், நாட்டின் பாரம்பரிய தளங்களுக்கு மதிப்பு சேர்க்கவும் Frammix எதிர்பார்க்கிறது.

Real Pixels
Real Pixels ஒரு விருது பெற்ற படைப்பு நிறுவனம், இது முன்னோடி ஹாலோகிராபிக் (holographic) திரைகளை உருவாக்குகிறது. இந்நிறுவனம் AVINA என்ற ஹாலோகிராம் சாதனத்தை உருவாக்கியுள்ளது, இதனை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியும்.

RN Innovations
RN Innovations, என்பது மற்றொரு தொடக்கநிலை வணிகமாகும், இது ஊடுருவல் கண்டறிதல் அமைப்புகளை உருவாக்கி, குறிப்பாக வங்கிகளுக்கு  மொத்த பாதுகாப்பு தீர்வுகளை வழங்குகிறது. RN Innovations ஊடுருவல் அச்சுறுத்தல்களை அடையாளம் காண்பது தொடர்பான மிகவும் அபிவிருத்தி செய்யப்பட்ட தடுப்பு பொறிமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த ஊடுருவல் கண்டறிதல் அமைப்பு ஒரு விரிவான தீர்வாகும், இது வங்கிகள் மற்றும் அப்பால் உள்ள ஏ.டி.எம்.களில் (ATM) பயன்படுத்தப்படுகிறது.

Kayal Technologies
Kayal Technologies என்பது computer vision மற்றும் ரெபொட்டிக்ஸ் இல் ஈடுபடும் ஆரம்ப கட்ட தொடக்கநிலை வணிகமாகும். Kayal தற்போது நீர்வழிகளைச் சுத்தம் செய்வதற்கான மின்சார குப்பை- சேகரிப்பு  சாதனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இது நவீன கடத்தல் இயக்க முறையைப் பயன்படுத்துகிறது.  இந்த அமைப்பு நீர்வழி பராமரிப்புக்கான தற்போதைய செலவீனத்தில் 70% வரை மீதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Idealsix
Idealsix என்பது கழிவு முகாமைத்துவத்தில் பிரதானமாக கவனம் செலுத்தும் உள்ளூர் சபைகளுக்கான ஒரு புதுமையான தீர்வு வழங்குநராகும். இந்த தொடக்கநிலை வணிகமானது அண்மையில் UCEMB என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியது, இது தற்போது எம்பிலிப்பிட்டிய மாநகர சபையால் கழிவு முகாமைத்துவத்தின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. குப்பைகளை சேகரிப்பவர்களைக் கண்டறிந்து, கண்டுபிடித்து,  அவர்களிடம் குப்பைகளை ஒப்படைக்க இந்த அப்ளிகேஷன் மக்களுக்கு உதவுகிறது. Idealsix கழிவு முகாமைத்துவ  நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பணியாற்றியுள்ளதுடன், கழிவு முகாமைத்துவத்துக்கான தீர்வுகளை தொடர்ந்து கண்டறிகின்றது. 

Tracified
Tracified என்பது ஒரு புதுமையான விநியோக சங்கிலி கண்டறியக்கூடிய மேடையாகும், இது முதற்தர தயாரிப்பு விற்பனையாளர்கள், தங்கள் தயாரிப்பின் மதிப்பை சில்லறை மற்றும் இணைய வர்த்தக மார்க்கங்கள் வழியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. முதற்தர உணவு பொருட்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒன்லைன் சில்லறை வர்த்தக நிலையங்கள் தயாரிப்புகளின் தரத்தை அறியவும், குறிப்பாக சேதன உணவு விநியோகத்தில் இந்த மேடை உதவுகிறது. Tracified என்பது ஒரு முழுமையான Cloud சார்ந்த தீர்வாகும், இதனை எந்த IoT (பொருட்களின் இணையம்) சாதனத்துடனும், பிளொக்செயின் (blockchain) தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்க முடியுமென்பதுடன், இது வணிக பெறுமதி சங்கிலி முழுவதும் நம்பகத்தன்மையை சரிபார்க்க உதவுகிறது.  வாடிக்கையாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் கூட உணவுகளின் தரம் மற்றும் நிலை குறித்து அறிவிக்கப்படுவதால் உணவு விநியோகமானது கலப்படம் செய்யப்படவில்லை என்பதனையும், இதன் மூலம் உணவு வழங்கல் பயனர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கின்றது என்பதையும் இந்த முயற்சி உறுதி செய்கிறது.

Cookoo Eats
Cookoo Eats கோரிய நேரத்துக்கு உணவு விநியோகம் செய்யும் அப்ளிகேஷனாகும், இது வசதியாகவும், நம்பகத்தன்மையுடனும் நுகர்வோரிடம் உணவைக் கொண்டு செல்ல உதவுகின்றது.  Cookoo Eats அப்ளிகேஷன் உணவகங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு விநியோகஸ்தர்கள் போன்ற பரந்த அளவிலான உணவு விற்பனையாளர்களை நுகர்வோருடன் இணைக்க ஒரு தளமாக செயல்படுகிறது, எனவே ஒருவர் விரும்பும் போதெல்லாம் தனக்கு பிடித்த உள்ளூர் உணவுகளை ஓடர் செய்யமுடியும்.

Spiralation  நிகழ்ச்சித் திட்டமானது தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்கள் அந்தஸ்தை அடையவும்,  சாத்தியமான தீர்வுகளை உருவாக்கவும் நாட்டின் பேண்தகு அபிவிருத்திக்கான நீண்டகால இலக்குகளை அடையவும் உதவியது. Spiralation இன் வழிகாட்டலின் மூலம் பல தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்கள் ஏற்கனவே தரமான கல்வி, கழிவு முகாமைத்துவம், சுகாதாரம், நல்வாழ்வு, ஆரோக்கியம், தொழில், புத்துருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் சமூகத்தில் தாக்கம் செலுத்தியுள்ளன.

Spiralation, அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு என முன்னர் அறியப்பட்ட கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் நிதியுதவியளிக்கப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார செயற்கிரம முகாமைத்துவ (IT -BPM) முயற்சிகளை நடைமுறைப்படுத்த ICTA ஐ ஒரு முன்னணி பங்குதாரராக அமைச்சு அடையாளம் கண்டுள்ளதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார செயற்கிரம முகாமைத்துவ துறைகளை மேலும் வலுப்படுத்தவும், இலங்கை தேசிய ஏற்றுமதி மூலோபாயத்தை சீராக்கவும் ICTA உடன் கைகோர்த்துள்ளது.


Add new comment

Or log in with...