சீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று?

சீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று?-2 Admitted in IDH with Supecious of Corana Virus

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொடையிலுள்ள தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சீன பெண் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் உறுதிப்படுத்த, அவர்களது இரத்த மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரேனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உலக சுகாதார நிறுவனம் ஒரு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அதற்கமைய,
- கைகளை சவர்க்காரம் பயன்படுத்தி நீரினால் கழுவுதல் அல்லது மதுசாரம் கலந்த கைகழுவும் திரவங்கள் மூலம் கழுவுதல்.
- இருமல் மற்றும் தும்மலின்போது கைக்குட்டை அல்லது முழங்கையை மடித்து மூக்கை மறைத்தல்.
- தடுமல் அல்லது காய்ச்சல் உள்ளவர்களுக்கு மிக அருகில் தொடர்புறுவதை தவிர்த்தல்.
- இறைச்சிகள், முட்டைகளை நன்றாக சமைத்தல்
- பண்ணை விலங்குகள் அல்லது காட்டு விலங்குகளை திரையின்றி தொடுவதை தவிர்த்தல்.

சீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று?-2 Admitted in IDH with Supecious of Corana Virus

சீனாவில் தற்போது வரை 41 பேர் இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதோடு, 1,287 பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நோய்த் தொற்றுக்குள்ளான வூஹான் நகரம் உள்ளிட்ட 33 நகரங்களின் வெளித் தொடர்புகளை முடக்கும் வகையில் அவை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...