முரசுமோட்டையில் விபத்து; 11 பேர் காயம் | தினகரன்


முரசுமோட்டையில் விபத்து; 11 பேர் காயம்

கண்டாவளை, முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று (25) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தும் டிப்பர் வாகனமும் முரசுமோட்டைப் பகுதியை கடக்கும்போது, தனியார் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டு விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளர், மற்றும் பேருந்தில் பயணித்த 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் வட்டக்கச்சி வைத்தியசாலையிலும் ஏனையோர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.என். நிபோஜன், பரந்தன் குறூப் நிருபர் - யது பாஸ்கரன்

 


Add new comment

Or log in with...