ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு செயலணிக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு செயலணிக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்-Rtd Major Gen Nanda Malwaarachchi Appointed as Director General of Multipurpose Development

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நிலைபேறானதும் பிரதான உபாய மார்க்கமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த, குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் அவர்களுக்கு அரச துறையில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவஆரச்சி, பதில் இராணுவ தளபதியாக 2007ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அவர் இந்தோனேசியாவிற்கான இலங்கை தூதுவராக 06 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

சட்ட, ஒழுங்கும் அமைச்சின் ஆரம்பகால செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராகவும் நந்த மல்லவஆரச்சி பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...