ஊடகவியலாளர்கள், வைத்தியர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வசதி

தபால் மூல வாக்களிப்பு சட்டம் உள்ளிட்ட தேர்தல் சட்டங்கள் சிலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ரி.ஹேரத் தெரிவிக்கையில்,சம்பந்தப்பட்ட சட்ட திருத்தம் தொடர்பிலான பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார்.

ஊடகவியலாளர்கள், வைத்தியர்கள் அடங்கலாக அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கும் வசதியான முறையில் வாக்களிக்கக்கூடிய புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்பொழுது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெறாத அல்லது அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்களுக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கு அல்லது ஏனைய பொருத்தமானமாற்று நடவடிக்கை தொடர்பிலும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இதேவேளை 18வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கல் மற்றும் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான திருத்தங்களுக்குமான சட்ட திருத்தம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நோக்கமாகும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்

(அ.த.தி)


Add new comment

Or log in with...