வவுனியா அரச அதிபர் இடமாற்றப்பட்டது ஏன்?

விளக்கமளிக்க வேண்டும்

வவுனியா மாவட்ட அரச அதிபர் ஏன் இடமாற்றப்பட்டார்? என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எம்.பி நேற்று சபையில் தெரிவித்தார். 

நிர்மாணத் தொழில் அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறிய அவர், 

10 வீதம் முஸ்லிம்கள் வாழும் நாட்டில் 3 மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு முஸ்லிம் மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும். 

பல்லின மக்கள் வாழும் நாட்டில் வவுனியா அரச அதிபரை இடமாற்றியது உகந்ததல்ல. வவுனியாவில் மூவின மக்களும் வாழ்கின்றனர்.முஸ்லிம் என்பதற்காக அவர் இடமாற்றப்பட்டாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

வவுனியா பம்பைமடு மக்களுக்கு குப்பை பிரச்சினைக்கு தீர்வாக வேறு இடத்தில் காணி வழங்க முடிவு செய்யப்பட்டது.30 வருட யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அந்த மக்கள் சட்டபூர்வமாக மீள்குடியேற்றப்பட்டவர்களாகும். ஒப்பந்தக்காரர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை.அதனை வழங்க வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...