1st Test: SLvZIM; அஞ்சலோ மெத்திவ்ஸ் கன்னி இரட்டைச் சதம் | தினகரன்


1st Test: SLvZIM; அஞ்சலோ மெத்திவ்ஸ் கன்னி இரட்டைச் சதம்

1st Test: SLvZIM; அஞ்சலோ மெத்திவ்ஸ் கன்னி இரட்டைச் சதம்-1st-Test-SLvZIM-Harare-Angelo-Mathews-Scored-Maiden-Centuary

இலங்கை 157 ஓட்டங்கள் முன்னிலையில்

சுற்றுலா இலங்கை அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ஹராரே மைதானத்தில் இடம் பெற்று வருகின்றது.

இப்போட்டியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான அஞ்சலோ மெத்திவ்ஸ் தனது முதலாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 515 ஓட்டங்களை பெற்ற வேளையில் தனது முதலாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

போட்டியின் 4ஆவது நாளான இன்று (22) 4 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இலங்கை அணி ஆட்டத்தை தொடர்ந்தது. இதன்போது அஞ்சலோ மெத்திவ்ஸ் 92 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களுடனும் ஆடுகளத்தில் இருந்தனர்.

தனஞ்சய டி சில்வா 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும், அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் இன்னிங்சின் இறுதிவரை ஆடி, தனது முதலாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.

இலங்கை அணி சார்பில், குசல் மெண்டிஸ் 80 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அதற்கமைய சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சிற்காக பெற்ற 358 ஓட்டங்களை கடந்த இலங்கை அணி, 157 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்று 9 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 515 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

சிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ராசா மற்றும் விக்டர் ந்யாஉசி (V Nyauchi) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சிம்பாப்வே 358/10

இலங்கை 515/9d
அஞ்சலோ மெத்திவ்ஸ் 200 (468)
குசல் மெண்டிஸ் 80 (163)
தனஞ்சய டி சில்வா 63 (112)
நிரோஷன் திக்வெல்ல 63 (120)

சிகந்தர் ராசா 3/62 (16.0)
விக்டர் ந்யாஉசி 3/69 (32.0)
சீன் வில்லியம்ஸ் 2/104 (32.2)


Add new comment

Or log in with...