வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை | தினகரன்


வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை

வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை-Notice to Wasantha Karannagoda and 14 Other-11 Youth Abduction

11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்வபம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மரசிங்க ஆகிய மூரடங்கிக மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (22) குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டது.

நாளை மறுதினம் (24) மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

கடந்த 2008 - 2009 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன விடயம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 'அட்மிரல் ஒப் த பிலீட்' (Admiral of the fleet) எனும் கௌரவ பட்டம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...