புனிதரும் மறைசாட்சியுமான புனித செபஸ்தியார் | தினகரன்


புனிதரும் மறைசாட்சியுமான புனித செபஸ்தியார்

புனிதரின் திருவிழா நேற்று

புனித செபஸ்தியார்புனிதரும் மறைசாட்சியுமாவார். இவர் பிரான்ஸ் நாட்டில் நர்போன் நகரில் கி.பி. 256ம் ஆண்டு பிறந்து இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வளர்ந்துவனப்புமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார். உரோமப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான  கொடுமைகளில் மறைசாட்சியாக இறந்தார்.

இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் மறை உரைகளில் காணக் கிடைக்கின்றது. இதன்படி செபஸ்தியாரின் பக்தி மிலன் நகரின் 4ம் நூற்றாண்டிலேயே இருந்துள்மை தெரிகின்றது.

:புனித செபஸ்தியார் ஃபிரான்ஸ் நாட்டில் நர்போன் நகரில் கி.பி. 256ம் ஆண்டு பிறந்து இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வளர்ந்து, வனப்புமிக்க வாலிபனாகத் திகழ்ந்தார்.

அவர் துன்புற்ற கிறிஸ்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடுரோம பேரரசன் தியோக்கிளேசியன் படையில் சேர்ந்தார். தன் வீர தீரத்தால் வெற்றி வாகைகள் பல சூடினார். தியோக்கிளேசியன் தான் வெற்றி பெற்ற ரோமானிய கீழ்திசை நாடுகளுக்கு மன்னனாக தன் தம்பி மாக்சிமியனை நியமித்தான். மன்னன் மாக்சிமியன் செபஸ்தியாரின் வீரதீரத்தையும், நற்குணங்களையும் கண்டு வியந்து, அவரை தன் படைத்தளபதியாகவும்நம்பிக்கையுள்ள மெய்காப்பாளராகவும், நண்பராகவும் ஆக்கிக் கொண்டான்.

செபஸ்தியார் அன்னை மரியாளைத் தாயாகவும்இயேசு கிறிஸ்துவைத் தன் அரசராகவும் கொண்டு திருத்தந்தைக்கு அன்பு மகனாக விளங்கினார். தன் பட்டங்களையும் பதவிகளையும் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்கும், சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும் அடிமைகளுக்கும் ஆதரவளித்து வந்தார்.

உரோமப் பேரரசின் சக்கரவர்த்தி தியோக்கிளேசியன் புதிதாகப் பரவி வளர்ந்து வந்த இயேசு கிறிஸ்துவின் சத்திய மறையின் மேல் வெறுப்புக் கொண்டான்.

கிறிஸ்தவர்களுக்கென்று தனித் தலைவர், தனிச்சட்டம் அன்பு மற்றும் சகோதரத்துவ உணர்வு, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற கொள்கை, மனிதனுக்கு மனிதன் சமம் என்ற கோட்பாடுகள் எல்லாம் அரசனே தெய்வம் என்ற எண்ணம் கொண்ட தியேக்கிளேசியனின்கோபக்கனலுக்கு நெய் வார்த்தன.

அவன் தன் தம்பி மாக்சீமியனுக்குக் கடிதம் எழுதி கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கக் கேட்டுக்கொண்டான். மன்னன் மாக்சீமியன் கொடுங்கோலன். கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பாதி சொத்தும் மீதி மன்னனுக்கும் என்று ஆணை பிறப்பித்தான். பேராசைக்காரர்களும் கொடியவர்களும் கிறிஸ்தவர்களை பிடித்துக் கொடுத்து ஆதாயம் தேடினர். கிறிஸ்தவர்களை கொடிய விலங்குகளுக்கு இரையாக்கியும், சித்திரவதை செய்தும் மகிழ்ச்சி கொண்டனர்.

பாதாள சிறைகளில் அடைக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிஆறுதல் கூறிஆதரித்து வந்தார் செபஸ்தியார்.

நகர அதிகாரி குரோமோசியான் பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருந்தார்.சிறையில் நடந்த அருள் அடையாளங்களை சிறை அதிகாரி வழியாகக் கேள்விப்பட்டு, செபஸ்தியாரை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீரத்தளபதி செபஸ்தியார், இறைவன் பாதம் மண்டியிட்டு, உருக்கமாக செபித்து, நகர் அதிகாரியின் உடம்பில் சிலுவை அடையாளம் வரைந்தார். உடனே நகர் அதிகாரி சுகம் அடைந்தார்.

வெளிப்படையாக மற்ற கிறிஸ்தவர்களைப்போல் செபஸ்தியாரைக் கொன்றால் நாட்டில் குழப்பம் உண்டாகும் என்று அஞ்சிய மன்னன்அவரை இரகசியமாய் ஒர் அறையில் அடைத்து வைத்தான்.

ஆப்பிரிக்க நாட்டு வில் வீரன் அபாக்கியானை அழைத்து, ‘செபஸ்தியாரை இன்று இரவே 2மணிக்குமேல் காட்டுப்பக்கம்; கொண்டு சென்று மரத்தில் கட்டி வைத்து, அணு அணுவாக வேதனைப்படுத்தி சல்லடையாக அம்பால் துளைத்து, சித்திரவதைசெய்து கொல்லுங்கள்; தலை, இதயம், வயிறு போன்ற வர்ம இடங்களில் அம்பு எய்து உடனே கொன்றுவிடக் கூடாது. என்று கோபாவேசமாக மாக்சிமியன் கட்டளையிட்டான்.

(தொடரும்)


Add new comment

Or log in with...