குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி | தினகரன்


குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி

குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி-Drown to Death-Varani Thenmarachchi Jaffna

வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் குளித்துக்கொண்டிருந்த நபரொருவர் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று (21) யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் நபரொருவர் நீராடியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். அதனை அடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரை தேடியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி பலி-Drown to Death-Varani Thenmarachchi Jaffna

சிறிது நேர தேடுதலின் பின் குறித்த நபர் குளத்தினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உயிரிழந்தவரை அடையாளம் காணும் வகையிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...