ராஜிதவின் பிணைக்கு எதிரான மனு மார்ச் 5இல் | தினகரன்


ராஜிதவின் பிணைக்கு எதிரான மனு மார்ச் 5இல்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய  உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த மீளாய்வு மனு  எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அன்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினருக்கு, நீதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான மனு இன்று (21) மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த மீளாய்வு மனு கடந்த 17ஆம் திகதி முதன் முறையாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...