ஸஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாக கைதான 61 பேரின் வி.மறியல் நீடிப்பு | தினகரன்


ஸஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாக கைதான 61 பேரின் வி.மறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று(14) காலை மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவினை பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 64 பேரில் ஏற்கனவே மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு குறூப்  நிருபர் - ஜவ்பர்கான்)


Add new comment

Or log in with...