நாளை முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு | தினகரன்


நாளை முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு

நாளை முதல் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் வாய்ப்பு-Rain Condition Increase from Tomorrow

நாட்டின் தென்மேற்கு பகுதிகள், கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழையுடனான வானிலையில் நாளையிலிருந்து (20) அடுத்த சில நாட்களுக்கு சிறியஅதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னார், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


Add new comment

Or log in with...