மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம் | தினகரன்

மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்-Accident on Batticaloa-Kalmunai Road-4 Injured Including 2Yr Old Child

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவத்தில் இரு வயதுக் குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்-Accident on Batticaloa-Kalmunai Road-4 Injured Including 2Yr Old Child

இன்று (19) பிற்பகல் 4.00 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி வந்த காரொன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் கொழுவப்பட்டு அதிக தூரம் இழுபட்டுச் சென்று இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்-Accident on Batticaloa-Kalmunai Road-4 Injured Including 2Yr Old Child

மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவனும் மனைவி யும் அவரது இருவயதுக் குழந்தையும் படுகாயமடைந்துள்ளதுடன் காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டு - கல்முனை வீதியில் விபத்து; 2 வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயம்-Accident on Batticaloa-Kalmunai Road-4 Injured Including 2Yr Old Child

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இடத்தில் கடந்த வாரம் ஏறபட்ட விபத்துச் சம்பவமொன்றிலும் ஒருவர் பலியாகிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு குறூப் நிருபர் - ரீ.எல்.ஜவ்பர்கான்)

Add new comment

Or log in with...