கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலாவெவ அணி சம்பியன்

பலளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த அணிக்கு பதினொரு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அரையிறுதி,இறுதிப் போட்டிகள் என்பன இம்மாதம் 15 ஆம் திகதி பலளுவெவ ரோலெக்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கெகிராவ பிரதேசத்திலுள்ள பிரபல 16 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இதில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள கலாவெவ அணியும், கெகிராவ அணியும் தகுதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கலாவெவ அணி ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 70 ஓட்டங்களைப் பெற்றனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிஹ்மத்துல்லா 35 ஓட்டங்களை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கெகிராவ அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இப்போட்டியில் 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற கலாவெவ விஜிதபுர அணி ரொலெக்ஸ் சம்பியன் கிண்ணத்தையும் இருபதாயிரம் ரூபா பணப்பரிசினையும் தனதாக்கி கொண்டது. இதில் இரண்டாம் இடத்தை கெகிராவ அணி பெற்றுக் கொண்டதுடன் மூன்றாம், நான்காம் இடங்களை முறையே பலளுவெவ ரொலெக்ஸ் அணி, ஹோராப்பொல அணி ஆகிய அணிகள் கிண்ணங்களையும், பணப்பரிசுகளையும் தனதாக்கி கொண்டன.

இறுதிப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கலாவெவ அணியின் நிஹ்மத்துல்லா இறுதிப் போட்டியின் சிறப்பாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டார். போட்டித் தொடரின் சிறப்பாட்டக்கராக கெகிராவ அணியின் சமன் தெரிவு செய்யப்பட்டதுடன் சிறந்த இளம் வீரருக்கான விருது ஹோராப்பொல அணியின் ஹிஜாசுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சிரேஷ்ட வீரருக்கான விருது பலளுவெவ ரொலெக்ஸ் அணியின் சலாகுதீன் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த விக்கெட் காப்பாளரா கெகிராவ அணியின் சல்மானும், சிறந்த அணித் தலைவராக பலளுவெவ ரொலெக்ஸ் அணியின் சிபானும் தெரிவு செய்யப்பட்டனர்.தொடரில் அதிகூடுதலான ஓட்டங்களைப் பெற்ற வீரராக கெகிராவ அணியின் சமன், தொடரில் அதி கூடுதலான விக்கெட் பெற்ற வீரராக பலளுவெவ அணியின் ரஸ்மிகானும் தெரிவு செய்யப்பட்டனர்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர் )


Add new comment

Or log in with...