பஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது | தினகரன்

பஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது

பஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது-Gelignite Sticks Found in Bus Driver and Conductor Arrested-Chettikulam-Vavuniya

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலிக்னைற் வெடி மருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (17) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் நேற்று இரவு (17) மறித்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது-Gelignite Sticks Found in Bus Driver and Conductor Arrested-Chettikulam-Vavuniya

இதன்போது குறித்த பேரூந்தில் 51 ஜெலிக்னைற் வெடிமருந்து குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவற்றை மீட்ட இராணுவத்தினர் குறித்த வெடிமருந்து குச்சிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டில் தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட ஜெலிக்னைட் வெடிமருந்து குச்சிகளும், கைது செய்யப்பட்ட இருவரும் செட்டிகுளம் பொலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேரூந்தும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் ஜெலிக்னைற் குச்சிகள் மீட்பு; சாரதி, நடத்துனர் கைது-Gelignite Sticks Found in Bus Driver and Conductor Arrested-Chettikulam-Vavuniya

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

Add new comment

Or log in with...