இயக்கச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம் | தினகரன்


இயக்கச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

இயக்கச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்-Village Gun-Shot Injured

இயக்கச்சி, முகாவில் பகுதியில் கட்டுத் துவக்கில் அகப்பட்ட நிலையில் படுகாயமடைந்த ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்மவத்தில், இராசையா பாஸ்கரன் எனும் 53 வயதான நபரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

குறித்த குடும்பஸ்தர் நேற்று (17) மாலை 6.00 மணியளவில் வீட்டிற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் தனது மாடுகளை தேடிச் சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியில வைக்கப்பட்டிருந்த பொறி வெடி வெடித்தே படுகாயமடைந்துள்ளார். அவரது முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் அங்கிருந்து பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

(கோப்பாய் நிருபர் - செல்வகுமார்)Add new comment

Or log in with...