நுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி

நுவரெலியாவில் உள்ள  சீதையம்மன்  கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு ரூ.5கோடி நிதியை வழங்கவுள்ளது.  இந்த கோயில் புனரமைப்புப் பணியை உடனடியாக தொடக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது . 

இந்திய மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில்  இலங்கைக்கு  விஜயம் செய்திருந்தனர்.  இவர்கள்  ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது. இந்த கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ. 5கோடி ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டு கொண்டனர்.  இது தொடர்பாக மத்திய பிரதேச, மாநில பா.ஜ.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரிமான  ராகேஷ் சிங் கூறுகையில்: அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்க மாநில அரசு மறுத்து வருகிறது. அவரது மேலிட தலைவர்களை திருப்திப்படுத்த இவ்வாறு செயல்படுகிறார். இதனை மறைக்க தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த மாநில அரசு சீதா கோயிலுக்கு நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

உண்மை என்னவெனில், ஜான்கி போன்ற பெயர்களைக் கொண்ட பல சிறுமிகள் பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்கள் குடியுரிமை பெறுவதை இந்த அரசாங்கம் எதிர்க்கிறது. இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. முதலில் அவற்றை பராமரிப்பது குறித்து சிந்திக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார். 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


Add new comment

Or log in with...