கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு | தினகரன்

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு

கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 22 மணித்தியால நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நாளைசனிக்கிழமை (18) காலை 9.00 மணி முதல் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை (19)  காலை 7.00 மணி வரை குறித்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் மின் தடை காரணமாக நீர் வெட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் சொய்சாபுர வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...