கஹட்டகஸ்திகிலிய விபத்தில் தந்தை பலி | தினகரன்

கஹட்டகஸ்திகிலிய விபத்தில் தந்தை பலி

தாயும் மகளும் காயம்

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்றிரவு (16) இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

அநுராதபுரம் திசை நோக்கிச் சென்ற ஜீப் வண்டி முன்னால் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி மற்றும் அவர்களது மகள் படுகாயமடைந்த நிலையில் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரான கணவர் உயிரிழந்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த தாயும் மகளும் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...