Oppo, Xiaomi, Vivo இணைந்து இலகுவான File Sharing

Oppo, Xiaomi, Vivo இணைந்து இலகுவான File Sharing-OPPO, VIVO & XIOMI Alliance

இம்மூன்று தரக்குறியீட்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே கிளிக்கில் கோப்புகளை பகிர முடிவதோடு, இப்புதிய வசதி OPPO ColorOS 7 உடன் அறிமுகம்

உலக முன்னணி ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளான OPPO, Vivo, Xiaomi (ஆங்கில அகர வரிசைப்படி) உலக சந்தையில், மையத்திலிருந்து மையத்திற்கான (Peer-to-Peer) தரவு பரிமாற்ற கூட்டணியை விரிவுபடுத்துவதற்காக இணைந்துள்ளன. அதே நேரத்தில் மேலும் பல Android ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளுக்கும் அதில் இணைய அழைப்பு விடுத்துள்ளது.

OPPO மற்றும் அதன் புதுமையான இயங்குதளமான ColorOS ஆனது ஏனைய தளங்களுடன் ஒத்துழைக்கிறது என்பதை பிரதிபலிக்கும் வகையில், பயனர்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் கோப்புகள், படங்கள், வீடியோக்களை அனுப்ப இக்கையடக்க தொலைபேசிக்கூட்டணி அனுமதிக்கிறது.

இக்கூட்டணி OPPO, Vivo, Xiaomi பயனர்களுக்கு இலகுவான, சிரமமில்லாத பகிர்தலுக்கு உதவுகிறது
இணையமானது அன்றாட வாழ்க்கையில் பெரிய வசதியைக் கொண்டு வந்துள்ளதோடு, தற்போது குறிப்பாக 5G உடன், மக்கள் வேகமான மற்றும் நிலையான இணைப்புகளை எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், வெவ்வேறு தொலைபேசி மாதிரிகள் மற்றும் தரக்குறியீடுகளுக்கு இடையில் கோப்பு பகிர்வின்போது உச்ச இணைப்பானது ஒரு தடையாக காணப்படுகின்றது.

இக்கடின நிலையைச் சமாளிப்பதற்கும், தரக்குறியீடுகளில் வேறுபட்ட ஸ்மார்ட்போன்களில் கூட இலகுவானதும் சிரமமின்றிய கோப்பு பகிர்வு அனுபவத்தைக் கொண்டுவருவதற்காகவும், பயனர்களுக்கு அதிவேக வைபை நேரடி பரிமாற்றத்தினை, தரவுப் பரிமாற்ற நெறிமுறையின் கீழ் OPPO, Vivo, Xiaomi ஆகியன, அதன் சாதனங்கள் ஊடாக பரிமாற்ற கூட்டணியை மையத்திலிருந்து மையத்திற்கான (Peer-to-Peer) தரவுப் பரிமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பில் OPPO இன் பிரதித் தலைவரும் மென்பொருள் பொறியியல் வணிகப் பிரிவின் தலைவருமான அண்டி வு தெரிவிக்கையில், "இம்மூன்று தரக்குறியீட்டு கூட்டாண்மையானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான OPPO, Vivo, Xiaomi பயனர்களை சிரமமின்றியதும் அதிகமான பயனர் மையத்தைக் கொண்ட கோப்புப் பகிர்வைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார் "OPPO, Vivo, Xiaomi ஆகியன தங்கள் பயனர்களுக்கு கூட்டாக சிறப்பாக சேவை செய்வதற்கான ஒரு முக்கியமான முதல் படி இதுவாகும் என்பதோடு, ஏனைய Android ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளும் மிகத் திறந்த, சிரமமின்றிய, ஊடாடல் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் அவர்களையும் வரவேற்கிறோம்." எனவும் தெரிவித்தார்.

கோப்பு பரிமாற்ற செயல்பாடு புளூடூத் குறைந்த சக்தி (Bluetooth Low Energy- BLE) இனைப் பயன்படுத்தி சாதனங்களை ஸ்கேன் செய்வதோடு, அது பரந்த அளவிலான மற்றும் குறைந்த மின் நுகர்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் WiFi P2P (Peer to Peer) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோப்புகளை அனுப்புகிறது. இது புளூடூத்தை விட வேகமானது என்பதோடு, பயனர்களின் வைபை இணைப்பையும் பாதிக்காது வகையில் செயற்படுகிறது. இது சராசரியாக செக்கனுக்கு 20MB (20MB/s) பரிமாற்ற வேகத்தையும் வழங்குகிறது.

சில ஸ்வைப்களின் ஊடாக அதிக சாதனங்களில் பகிருங்கள்
ColorOS 7 உடனான OPPO ஸ்மார்ட்போன்களில், முன் திரையில் கீழ் நோக்கி ஸ்வைப் செய்வதன் மூலம் பயனர்கள் ட்ரொப் டவுன் மெனுவை (drop down menu) திறக்கலாம். அங்கு “OPPO Share” பொத்தான் காணப்படுகின்றது. அதனை சற்று அழுத்திப்பிடித்ததும் அதில் நுழைய முடியும். vivo அல்லது Xiaomi தொலைபேசிகளிலும் அதனை மேற்கொள்வதன் மூலம் கோப்புகளை அனுப்ப அல்லது பெறலாம்.

இது ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்ப பயனர்களை அனுமதிப்பதால், பல கோப்புகளை எளிதாக அனுப்புவது பயனர்களுக்கு இலகுவாகின்றது.

Oppo, Xiaomi, Vivo இணைந்து இலகுவான File Sharing-OPPO, VIVO & XIOMI Alliance

ColorOS 7 (அன்ட்ரொய்ட் 10) மற்றும் அதற்குப் பின்னரான இயங்குதளங்களுடனான சாதனங்களுடன் OPPO Share ஒத்திசைகின்றது. ColorOS 7 தற்போது Reno 2, Reno 10X Zoom, F11 Pro, F11 Pro Marvel’s Avengers மட்டுப்பத்தப்பட்ட பதிப்பு, F11 ஆகியவற்றில் சோதனை பதிப்பாக கிடைக்கிறது. இவ்வெளியீடானது, எதிர்வரும் மாதங்களில் Find Series, Reno Series, R Series, F Series, A Series, K3 ஆகியவற்றிலும் உள்ளடக்கப்படவுள்ளது.


Add new comment

Or log in with...