முறையாக விலக, மீண்டும் இணைய முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு

முறையாக விலக, மீண்டும் இணைய முப்படை வீரர்களுக்கு பொது மன்னிப்பு-General Amnesty for Tri-Forces

பெப்ரவரி 05 - 12 வரை வாய்ப்பு

சட்டரீதியில் படையிலிருந்து  விலகமால் சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள அல்லது மீண்டும் இணைவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய 2020 பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் 7 நாட்களை (2020.02.05 - 2020.02.12)பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமன்னிப்பு காலம் கடந்த வருடம் செப்டெம்பர் 30 (2019.09.30) ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகாமல் சென்றவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட யுத்த சூழல் காரணமாக தாய் நாட்டிற்காக சேவையாற்றும் பொருட்டு முப்படையில் இணைந்து கொண்ட படைவீரர்களில் சிலர் பல்வேறு சிக்கல்கள் மற்றும் வசதியின்மை காரணமாக சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்றுள்ளனர்

இவ்வாறு சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைந்து தமது தாய் நாட்டிற்காக தொடர்ந்தும் சேவையாற்ற வாய்ப்புக்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய பெப்ரவரி 05 (2020.02.05)ஆம் திகதி முதல் 07 நாட்களை பொது மன்னிப்பு காலமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...