நிலவு செல்ல துணைவியை தேடும் ஜப்பான் செல்வந்தர் | தினகரன்


நிலவு செல்ல துணைவியை தேடும் ஜப்பான் செல்வந்தர்

ஜப்பானின் பெரும் செல்வந்தரான யுசாகு மெசாவா நிலவுக்கு தம்முடன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு வாழ்க்கைத் துணைவி ஒருவரை தேடி வருகிறார்.

ஸ்பேஸ் எக்ஸின் முதலாவது நிலவுக்கான சுற்றுப்பயணத்தில் 44 வயதாக மெசாவா இணையவுள்ளார். இதன்மூலம் நிலவை சுற்றிவரும் முதல் சிவில் பயணியாக அவர் பதிவாகவுள்ளார்.

2023 ஆம் ஆண்டு இந்த பயணம் இடம்பெறவுள்ளது. 1972 தொடக்கம் நிலவுக்கான மனிதனின் முதல் பயணமாகவும் இது அமையவுள்ளது.

இந்த அனுபவத்தை குறிப்பாக பெண் ஒருவருடன் பகிர்ந்துகொள்ள தாம் விரும்புவதாக அவர் இணைதளம் ஒன்றில் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலதிபரான மெசாவா தனது காதலியான 27 வயது அயாமே கொரிகியுடனான உறவைத் துண்டித்துக் கொண்ட நிலையில், பொருத்தம் தேடி ஒரு நிகழ்வுக்கு விண்ணப்பிக்கும்படி பெண்களை கேட்டுக்கொண்டுள்ளார். “பெண் விண்ணப்பதாரர்கள் விண்வெளிக்குச் செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும், அதற்கான தயாரிப்பில் பங்கேற்கவும், உலக அமைதியை விரும்பும் ஒருவராகவும் இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...