பிபா அங்கத்துவச் சங்க மத்தியஸ்தர்கள், மதிப்பீட்டாளர்ளுக்கான செயலமர்வு

சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிபா அங்கத்துவச் சங்க மத்தியஸ்தர்ளுக்கான ஐந்து நாள் பயிற்சி நெறி ஜனவரி 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தில் நடைபெற்றது.

இப் பயிற்சிநெறிக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆலோசனயுடன் இலங்கை உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பணிப்பாளராக தற்பொழுது இலங்கையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இந்திய நாட்டவரான சங்கர் கோமலேஸ்வரன் மேற்கொண்டிருந்தார். இவர் உலக உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகளில் கடமையாற்றியுள்ள அனுபவம் மிக்க முன்னாள் சர்வதேச மத்தியஸ்த்தராவார்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்பொழுது இலங்கையில் நடைபெற்ற குறித்த பயிற்சி நெறியில் இலங்கையின் சகல மாவட்டங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட நிபுணத்துவம் மிக்க 35 மத்தியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர். மேலும்,மத்தியஸ்த்தர் மதிப்பீட்டாளர்கள் 15 பேரும்இப்பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர்.

பயிற்சிநெறியின் பயிற்றுவிப்பாளர்களாக ரஷ்யா நாட்டைச் சேர்ந்த வெலன்ரின்,உடற்பயிற்சிக்கான பயிற்றுவிப்பாளராக மலேசிய நாட்டைச் சேர்ந்த சுபியான் ஆகிய இருவரும் பணியாற்றினர்.

பயிற்சிக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை உதைபந்தாட்ட மத்தியஸ்தர் பணிப்பாளராக கடமையாற்றம் இந்திய நாட்டவரான சங்கர் கோமலேஸ்வரன் , மத்தயஸ்தர் சங்க தலைவர் தேசப்பிரிய வழங்கினர்.

குறித்த பயிற்சி நெறி சிறப்பான முறையில் இலங்கை மத்தியஸ்தர்களின் அறிவை இற்றைப் படுத்தக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டு நடாத்தப்பட்டுள்ளதென இலங்கை உதைபந்தாட்டச் சம்ளேனத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் தமது உரைகளின் போது மத்தியஸ்தர் சங்க தலைவர் தேசப்பிரிய,சங்கர் கோமலேஸ்வரன் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

திருகோணமலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...