ராஜித சுமார் 4 மணிநேரம் CID இல் வாக்குமூலம் | தினகரன்


ராஜித சுமார் 4 மணிநேரம் CID இல் வாக்குமூலம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மூன்று மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர்  26ஆம் திகதி லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தஅவர், 18 நாட்களின் பின்னர் நேற்று (13) நள்ளிரவு வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். 


Add new comment

Or log in with...