ஜா –எலவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் கொலை | தினகரன்

ஜா –எலவில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் கொலை

ஜா –எல, துடெல்ல பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இருந்து வந்த குடும்பத் தகராறு காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணினுடைய மகளின் கணவரினால் இக்கொலைச் சம்பவம் புரியப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், இக்கொலைச் சம்பவத்தை புரிந்த சந்தேகநபர் அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஜா –எல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...