பஸ் விபத்தில் 23 பேர் காயம் | தினகரன்

பஸ் விபத்தில் 23 பேர் காயம்

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் கண்டியிலிருந்து  ஹட்டன் நோக்கிப்பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில்  23 பேர் காயமடைந்துள்ளதாக  கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில்இன்று (14) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதை புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால் குறித்த பகுதியில் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வரும் நிலையிலும்  அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதன்காரணமாகவும்இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

காயங்களுக்குள்ளான  23 பேரில் 13  பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளது.ஏனைய பத்து பேரில் நான்கு பேர் தொடர்ந்து வட்டவளைவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஆறுபேர் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை அதிகாரிகள்  தெரிவித்தார் 

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - எம்.கிருஸ்ணா)

 


Add new comment

Or log in with...