மகிழடித்தீவு வைத்தியசாலை தேசிய ரீதியில் முதலிடம் | தினகரன்


மகிழடித்தீவு வைத்தியசாலை தேசிய ரீதியில் முதலிடம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை, ஆரம்ப சுகாதார அமைப்பில் சிறந்த நடைமுறைகளை பின்பற்றியதனால் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவை அமைச்சிடமிருந்து, வைத்திய கலாநிதி தவசீலன் இதற்கான சான்றிதழினை அண்மையில் கொழும்பில் வைத்து பெற்றுக்கொண்டார்.

மட்டு. மாவட்ட படுவான்கரை பிரதேசத்திற்குட்பட்ட போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய செயலகப் பிரிவுகளில் எந்தொரு ஆதார, பொது வைத்தியசாலையோ மற்றும் போதனா வைத்தியசாலையோ அற்ற நிலையில் வசதி, வாய்ப்புகள் அற்ற பின்தங்கிய இவ் வைத்தியசாலை தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளமை படுவான்கரை பிரதேசத்திற்கு பெருமையாகவுள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிப்புற்ற இவ்வைத்தியசாலை, கடந்த மூன்று வருடங்களாக தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றிபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மண்டூர் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...