சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை; உச்ச நீதிமன்றம்

சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்றும் அதில் உள்ள கேள்விகளையே விசாரிக்க போகிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்றம்விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவமபர் 14ம் திகதி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பது குறித்து எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என்று அறிவித்தார்.

சபரிமலை கோவில் பிரச்சினையில் நவம்பர் 14 ம் திகதி நிறைவேற்றிய மறுஆய்வு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகளை மட்டுமே கேட்போம்.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற 50 சீராய்வு மனுக்களை விசாரிக்கப் போவதில்லை. விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளைத்தான் விசாரிக்க போகிறோம். கோவில், மசூதி போன்ற வழிபாட்டு தலங்களுக்குள் பெண்கள் நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை விசாரிக்க இருக்கிறோம் கோயில் மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை கேட்க விருக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...