ரஞ்சன் ராமநாயக்க கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம் | தினகரன்

ரஞ்சன் ராமநாயக்க கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம்

ரஞ்சன் ராமநாயக்க கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநீக்கம்-Ranjan Ramanayake Suspended From UNP Membership

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட பல்வேறு நபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பேசியதாக தெரிவிக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...