சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் 1க்கு முன்னர் நியமனம் | தினகரன்

சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் 1க்கு முன்னர் நியமனம்

சுமார் 50 ஆயிரம் உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நியமனங்கள் வயதைக் கருத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் குறைந்தளவிலான பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்ற பெயரில் நியமனங்கள் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசில் அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுத்திருந்ததாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள புள்ளிவிபரங்களுக்கமைய சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அவர்களை எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி பாடசாலைகளுக்குள் இணைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...