இடமாற்றம் பெற்றுச் செல்லும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவம் | தினகரன்


இடமாற்றம் பெற்றுச் செல்லும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவம்

இடமாற்றம் பெற்றுச் செல்லும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் நேற்று (12) கௌரவித்தது.

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த இரண்டரை வருடங்கள் கஸ்தூரி ஆராச்சி கடமையாற்றியிருந்தார்.

இவரை கௌரவித்து வழியனுப்பும் வைபவம் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நடைபெற்றது. இதில் சம்மேளன செயலாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, பிரதி தலைவர் எம்.ஐ.எம்.சுபைர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் ​ெடாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.முஸ்தபா உட்பட சம்மேளன பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சியியை நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...