போதைப்பொருளுடன் சிவனொளி பாதமலை சென்ற 19 பேர் கைது | தினகரன்

போதைப்பொருளுடன் சிவனொளி பாதமலை சென்ற 19 பேர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளி பாதமலை சென்ற 19 பேர் கைது-Youth Travel Sri Pada with Drugs Arrested at Hatton

இரு நாட்களில் 33 பேர் கைது

போதைபொருட்களுடன் சிவனொளி பாதமலை யாத்திரைக்கு சென்ற இளைஞர்கள் 19 பேர் ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பிரிவினாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (11) பிற்பகல் 3.00 மணி முதல் 6.00 மணி வரை ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றததடுப்பிரினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் சிவனொளி பாதமலை சென்ற 19 பேர் கைது-Youth Travel Sri Pada with Drugs Arrested at Hatton

இவர்களிடமிருந்து கேரள கஞ்சா, ஹெரோயின், மதன மோதகம், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவவர்கள் கொழும்பு, இரத்தினபுரி, பொலன்னறுவை, நீர்கொழும்பு, அநுராதபுரம், காலி, கம்பளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று (12) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிவனொளி பாதமலை புனித பிரதேசத்திற்கு போதைவஸ்த்துகளை கொண்டு செல்வதனை தடுப்பதற்காகவும், போதைவஸ்த்து பாவனையினால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காகவும் ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மோப்பநாய்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர்.

நேற்றுமுன் தினம் (10) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதைவஸத்துகளுடன் யாத்திரை சென்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹட்டன் கே. சுந்தரலிங்கம்)


Add new comment

Or log in with...