உக்ரைன் விமானத்தில் பயணித்த 176 பேரும் பலி (UPDATE)

உக்ரைன் விமானத்தில் பயணித்த 176 பேரும் பலி (UPDATE)-ukraine plane crash

உக்ரைனுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று விபத்திற்குள்ளாகியதில், அதில் பயணித்த 176 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உக்ரைன் விமானம் விபத்து  10.23am

உக்ரைனுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று தெஹ்ரானுக்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட 176 பேருடன் சென்ற விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 176  பேருடன் சென்ற உக்ரைன் நாட்டு விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொருங்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஈரானில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொருங்கியது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...