Daraz.lk மூலம் சமுர்த்தி சுய தொழிலாளர்களின் பொருட்கள் விற்பனை

ஒப்பந்தம் கைச்சாத்து

சமுர்த்தி சுயத்தொழிலாளர்களின் உற்பத்திகளை ஒன்லைன் மூலம் (Online) கொள்வனவு செய்வதற்கான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Daraz.lk என்ற இணையத்தின் ஊடாக சமுர்த்தி சுயத்தொழிலாளர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய முடியும் என்பதுடன், அவர்களது உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை வெளிப்படையான சந்தைக்கு ஒன்லைன் முறைமூலம் நேரடியாக கொண்டுசெல்வதன் மூலம் இவர்களின் வியாபாரத்தை விரிவுபடுத்தவும் கட்டியெழுப்பவும் முடியும். இதற்கான உடன்படிக்யொன்று நேற்று முன்தினம் Daraz.lk என்ற இணையத்தின் உரிமையாளருக்கும் சமுர்த்தி திணைக்களத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் அதிகாரிகளும், Daraz.lk இணையத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சமுர்த்தி சேவை நாட்டுக்கு பாரிய பயனை கொடுக்கிறது. நாட்டில் 1,073 சமுர்த்தி வங்கிகள் உள்ளன. 122 பில்லியன் நிதி சமுர்த்தி சேவைக்காக உள்ளது. தரம்மிக்க உற்பத்திகளுக்கு உயரிய விலையை பெற்றுக்கொடுக்கும் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 


Add new comment

Or log in with...