பெற்றோலியம் ஸ்டோர்ஜ் நிறுவன அதிகாரிகள் இலஞ்சம் பெறுவதாக அமரவீரவிடம் முறைப்பாடு

இலங்கை பெற்றோலியம் ஸ்டோர்ஜ் டர்மினல் நிறுவனத்தின் எரிபொருள் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் இருவர் வெளிப்படையாக இலஞ்சம் வாங்கிக்கொண்டு தனியார் எரிபொருள் பௌசர்களுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதாக நிறுவனத்தின் அதிகாரிகளால் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தாம் நினைக்கும் நேரத்தில் எரிபொருளை பகிர்ந்தளிப்பதாகவும் அலுவலகத்தை திடீர் திடீரென மூடுவதாகவும் வேலை நேரத்தில் மதுபானம் அருந்தியதாகவும் நேரத்துக்கு எரிபொருளை பகிர்ந்தளிப்பதில்லையெனவும் நிறுவன சேவையாளர்கள் அமைச்சருக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.

இந்த அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்க விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார்.


Add new comment

Or log in with...