மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சமுர்த்தி வங்கி உதவி | தினகரன்


மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சமுர்த்தி வங்கி உதவி

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபங்களுக்கு அமைய சமுர்த்தி வங்கிகளும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தேசிய ரீதியில் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கி வருகின்றது.  

சமுர்த்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் சுற்றுநிருபங்களுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படைக் கணக்கில்  கொடிவிற்பனை மூலம் சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை  உபகரணங்கள், மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டன.  

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதனின் வழிகாட்டலுக்கமைய ஆலையடிவேம்பு தெற்கு சமுர்த்தி வங்கிச்சங்க முகாமையாளர் கே.அசோக்குமார் தலைமையில் சமுர்த்தி வங்கியில்இடம்பெற்ற நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளையும் வீடமைப்பிற்கு தேவையான தகரங்களையும் கையளித்தனர்.  

இதேநேரம் விரைவில் மேலும் பல மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையும் பிரதேச செயலாளரின் ஆலோசனையுடன் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

வி.சுகிர்தகுமார் -வாச்சிக்குடா  விஷேட நிருபர்  


Add new comment

Or log in with...