பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம் | தினகரன்


பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்

பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளருக்கு இடமாற்றம்-Discipline & Conduct Division

பதில் பணிப்பாளராக, அதில் கடமையாற்றிய ASP ஒருவர் நியமனம்

பயங்கரவாத தடுப்பு பிரிவின் (TID) பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜே.பீ.டி. ஜயசிங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜே.பீ.டி. ஜயசிங்க, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய பயங்கரவாத தடுப்பு பிரிவில் கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஏ.ஆர்.பீ.ஜே. அல்விஸ்  அதன் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...