இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறை

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறை-2 Police Officers Sentenced to 28 Years Rigorous Jail Sentence

கஞ்சா வைத்திருந்த பொலிஸ் பயிலுனர் பணி நீக்கம்

இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூபா 10,000 பணத்தை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் இன்ஸ்பெக்டர் (IP) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (PC) ஆகிய இருவருக்கே இவ்வாறு 28 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் பயிற்சி பெற்று வந்த பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சி வித்தியாலயத்தில் பயிற்சி பெற்று வந்த குறித்த கான்ஸ்டபிள், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபிள் கடந்த வருடம் மே மாதம் பொலிஸ் திணைக்களத்தில் சேவையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...