275 அதிபர் வெற்றிடங்களுக்கு நேர்முகப் பரீட்சை | தினகரன்


275 அதிபர் வெற்றிடங்களுக்கு நேர்முகப் பரீட்சை

275 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை நடத்துவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இன்று (09) கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதத்திற்குள் இதற்கான நேர்முகப் பரீட்சை நிறைவடையுமென, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அதிபர் பதவிக்கான வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்களெனவும்,  அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...