கடந்த 70 ஆண்டுகளில் மிகவும் துணிவான முடிவுகளை எடுப்பவர் மோடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் யாரும் மேற்கொள்ளத் துணியாத முடிவுகளை மேற்கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கை குறித்த ‘கா்மயோதா கிரந்த்’ என்ற நுால் புதுடில்லியில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நுாலை வெளியிட்டு பேசியதாவது: ஒரு சாராரை திருப்திபடுத்தும் அரசியல், ஜாதியம், வாரிசு அரசியல் ஆகிய மூன்று சாபங்களையும் இந்திய அரசியலில் இருந்து நீக்கியவர் பிரதமர் மோடி. அவர் எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர் ராஜ தந்திரி கடின உழைப்பை ஊக்குவிப்பவர் திறன்வாய்ந்த நிர்வாகி மற்றும் தலைமைப் பண்பில் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் சீர்மிகு தலைவர். இத்தகைய உயரிய தகுதிகளை உடையவர் பிரதமர் நரேந்திர மோடி.

உலக அளவில் இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவதற்காக, வெளியுறவுக் கொள்கையையும் தேசிய பாதுகாப்பு கொள்கையையும் அவர் மேம்படுத்தினார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு உரிய பதிலடி தரப்படும் என்ற நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதன் மூலம் உலக அளவில் வலுவான நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

சித்தாந்தங்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தது, அரசியலில் நுழைந்தது, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அரசமைப்புச் சட்டத்தையும் உறுதிசெய்தது என அவரது வாழ்க்கை பயணம் மூன்று பாகங்களைக் கொண்டுள்ளன. அவரது குழந்தைப் பருவம் வறுமை நிறைந்ததாக இருந்தது. சமூக புறக்கணிப்பையும் அவர் எதிர்கொண்டார்.

 

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 


Add new comment

Or log in with...