ரஞ்சனின் இறுவட்டுகளை பிரதம நீதியரசருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் | தினகரன்


ரஞ்சனின் இறுவட்டுகளை பிரதம நீதியரசருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இறுவட்டுகளை பிரதம நீதியரசருக்கு அனுப்பி, இதனுடன் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் கோரினார். குரல் பதிவுகள் பொலிஸாரினால் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறிய அவர், வீடு சோதனையிடப்பட முன்னரே அவை வெளியில் வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது.

சிங்கள மக்களை ஐ.தே.க தவறாக எடைபோட்டு இனவாத அரசியலை நம்பி தோல்வியடைந்தது.தற்பொழுது புதிய திரைப்படமொன்று வெளியாகியுள்ளது.ரஞ்சன் ராமநாயக்க பிரதான நடிகராக நடித்துள்ள 'குரல்பதிவு வெ ளியானது' என்பது தான் அந்த திரைப்படமாகும்.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குரல் பதிவுகளில் ஓரிரண்டே வெளியில் வந்துள்ளன.

நாமல்,ஜோன்ஸ்டன் போன்றோரை கைது செய்யவும் கம்மம்பிலவிற்கு பிணை வழங்குவதை தடுக்கவும் ரஞ்சன் செயற்பட்டுள்ளார்.இதுதான் நல்லாட்சியில் நடந்தவை.

சஜித் பிரேமதாஸவை பற்றிய கூறிய குரல்பதிவும் வெளியில் வந்துள்ளது.

எனவே இந்த இருவெட்டுக்களை பிரதம நீதியரசுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் கோருகிறோம்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...